FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

பள்ளி மாணவி அபர்ணா கொலை வழக்கு: சிபிஐ அதிகாரிகள் புதுகையில் விசாரணை

புதுகையில் கடந்த 2011-ம்  ஆண்டில் வீட்டில் தனிமையில் இருந்தபோது கொலைசெயப்பட்ட பள்ளி மாணவி அபர்ணா வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை

Updated On : 3 பிப்ரவரி 2015, 4:30 pm IST
பகிர்:

புதுகையில் கடந்த 2011-ம்  ஆண்டில் வீட்டில் தனிமையில் இருந்தபோது கொலைசெயப்பட்ட பள்ளி மாணவி அபர்ணா வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர்.

அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரான க. கலைக்குமார், ஆசிரியை ராஜம் தம்பதியர்  தங்களது குழந்தைகள்   அபர்ணா(15),நிஷாந்த்(6) ஆகியோருடன் புதுக்கோட்டை  சத்தியமூர்த்தி நகரில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு, மார்ச் 9-ம் தேதி பெற்றோர் பள்ளிக்கு சென்று விட்டதால் வீட்டில் அபர்ணாவும்,தம்பியும்  இருந்துள்ளனர். அப்போது,  வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அபர்ணாவை ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து அறைக்குள்ளேயே மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டு, பீரோவில் இருந்த சுமார் 25 பவுன் நகைகளை திருடிச்சென்றனர். இது குறித்து கணேஷ்நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவந்தனர்.

ஆனால், இவ்வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலை நீடித்துவந்ததைக் காரணம்காட்டி அபர்ணாவின் பெற்றோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையை நாடியதையடுத்து 13.12.2011  -ல் இவ்வழக்கை  சிபிசிஐடி பிரிவின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. மாணவி அபர்ணாவின் பெற்றோரின் வாக்குமூலத்தின்படி இவ்வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் புதுகை கணேஷ்நகர் 2 -ம் வீதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரா. சாகுல்அமீது. காமராஜபுரம் 35 -ம் வீதியைச்சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் இ.முகமதுஅனீபா, முன்னாள் திமுக எம்எல்ஏ- ரா.சு.கவிதைப்பித்தனின் மகன்களான காந்திநகரைச் சேர்ந்த க. கவிவேந்தன்(24), க.இசைவேந்தன்(19), சின்ராஜ்(26) ஆகிய 5 பேரையும்  கடந்த 26.9.2013 -ம் தேதி புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் சிபிசிஐடி போலீஸாரால் ஆஜர்  செய்யப்பட்டு,அங்கு வாக்குமூலம் பெறறப்பட்டது

Advertisement

Advertisement

இதையடுத்து  சிபிஐ விசாரணை கோரி அபர்ணாவின் பெற்றோர் தாக்கல் மனுவை ஏற்றுக்கொண்ட மதுரை உயர்நீதி மன்றம், அபர்ணா கொலைவழக்கை சிபிஐ (மத்திய புலனாய்வுப்பிரிவு) விசாரிக்க வேண்டுமெ கடந்த 27.9.2013 -ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து உள்ளூர் காவல்துறை, மற்றும் சிபிசிஐடி போலீஸார் மேற்கொண்ட விசாரணை அறிக்கைகள் சிபிஐ வசம் வந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 10.10. 2013 -ல் வழக்க சிபிஐ விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதைத்தொடர்ந்து, சிபிஐ கண்காணிப்பாளர் ஹபீஸ்சிங் தலைமையிலான போலீஸார் கடந்த 17.12.2013 -ல்  முதல்கட்ட விசாரணையைத் தொடக்கினர். பின்னர், சிபிஐ பிரிவின் புதிய கண்காணிப்பாளரான சரவணன் தலைமையிலான போலீஸார்  அவ்வப்போது விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து புதுக்கோட்டையில் முகாமிட்டுள்ள சிபிஐ ஆய்வாளர் ரவி தலைமையிலான போலீஸார், மாணவி அபர்ணாவின் பெற்றோரிடம்  விசாரணை நடத்தினர். இந்தக் கொலை வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படும் நிலையி்ல், விசாரணையை துரிதப்படுத்தி இறுதி அறிக்கை சமர்ப்பிக்கவும், குற்றவாளிகளை கைது செய்யவும் காலக்கெடு விதிக்க வேண்டுமென வலியுறுத்தி மீண்டும் உயர்நீதிமன்றத்தை நாட உள்ளதாக மாணவி அபர்ணாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதனிடையே  சிபிஐ போலீஸார் வழக்கு தொடர்பாக பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமையும் விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments