உலகப்புகழ் பெற்ற மைசூர் தசராவிழா அக்.14-ஆம் தேதி தொடக்கம்
அக்.14-ஆம் தேதி உலகப்புகழ்பெற்றதசராவிழா தொடக்கப்பட உள்ளது. வறட்சியால் மாநிலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மைசூரு தசரா ஊர்வலத்திற்கான செலவை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் சீனிவாஸ்மூர்த்தி தெரிவித்தார்.
அக்.14-ஆம் தேதி உலகப்புகழ்பெற்றதசராவிழா தொடக்கப்பட உள்ளது. வறட்சியால் மாநிலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மைசூரு தசரா ஊர்வலத்திற்கான செலவை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் சீனிவாஸ்மூர்த்தி தெரிவித்தார்.
இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மைசூருவில் புகழ்பெற்ற தசரா ஊர்வலம் வரும் அக். 14-ஆம் தேதி சாமூண்டேஸ்வரிக்கு சிறப்பு பூஜை செய்வதன் மூலம் உலகப்புகழ்பெற்றதசராவிழா தொடங்க உள்ளது.
அதனை தொடர்ந்து அக்.23-ஆம் தேதி புகழ்பெற்ற விஜயதசமி தசரா ஊர்வலம் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டுகளில் தசரா ஊர்வலத்திற்காக மட்டும் ரூ. 14 கோடி நிதி ஒதுக்குவது வாடிக்கையாக இருந்தது. தற்போது மாநிலத்தில் வறட்சி நிலவுவதால், அதனை ரூ. 4 கோடியாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
நிகழாண்டில் நடைபெறும் தசரா ஊர்வலத்தை விவசாயி ஒருவரை கொண்டு தொடக்கி வைக்க முடிவு செய்துள்ளோம். அந்த விவசாயி யார் என்பதனை பின்பு அறிவிக்கப்படும். தசரா விழாவையொட்டி அரண்மனையில் அக். 14-ஆம் தேதி நடைபெறும் கலாசார விழாவை முதல்வர் சித்தராமையா தொடக்கி வைப்பார்.
2 நாட்கள் நடைபெரும் கலாசார விழாவில் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளும், காவல்துறையின் வாத்திய கோஷ்டிகளும் பங்கு பெற உள்ளன. கலாசார நிகழ்ச்சிகளில் உள்ளூரைச் சேர்ந்த கலாசாரக்குழுக்கள் மட்டுமே பங்கு கொள்கின்றன. தசரா விழாயொட்டி அமைக்கப்பட்டுள்ள குழு, துணைக்குழுக்களில் அதிகாரிகளும் இடம்பெற்றிருப்பார்கள் என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.