FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கரூர் அருகே 2 சிறுவர்கள் கிணற்றில் மூழ்கி பலி: போலீஸார் தீவிர விசாரணை

கரூர் அருகே இரண்டு சிறுவர்கள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

9 ஜனவரி 2024, 12:12 pm
பகிர்:

கரூர் அருகே இரண்டு சிறுவர்கள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் அருகே உள்ள வடிவேல் நகரைச் சேர்ந்த சரவணன் என்பவரது  மகன் ஹரிஹரசுதன்.(11)  கரூரில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று இதே பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் சதீஷ்குமாருடன்  வெளியில் சென்றுள்ளான்.

பின்னர் இருவரும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, கரூர் நகர காவல் நிலையத்தில் அவர்களை கண்டுபிடித்து தரும்படி பெற்றோர்கள் புகார் அளித்திருந்தனர்.

Advertisement

Advertisement

இந்நிலையில், கரூர் அருகில் ஆண்டான்கோயில் புதூர் பகுதியில் உள்ள வயல்வெளியில் உள்ள கிணற்றில் சிறுவன் உடல் சடலமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்று பார்க்கையில் அந்தச் சிறுவன் ஹரிஹரசுதன் என தெரியவந்தது.

இதையடுத்து அச்சிறுவனின் உடலை போலீசார் கைப்பற்றினர். கிணற்று மேட்டில் இரண்டு சிறுவர்களின் உடைகள் கிடந்துள்ளதால், ஹரிஹரசுதனுடன் காணாமல் போன சதீஸ்குமாரும் கிணற்றில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கிணற்று நீரை வெளியேற்றி தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments