FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நாகூரில் ஆண்டு கந்தூரி விழா: துணை குடியரசுத் தலைவர் வாழ்த்து

நாகூர் தர்காவில் நாகூர் ஆண்டவர் என அழைக்கப்படும் ஹஜ்ரத் சாஹூல் ஹமீதின் மகன் ஹஜ்ரத் செய்யது முஹம்மது யூசுப் சாஹிபின் வருடாந்திர கந்தூரி விழா திங்கள்கிழமை தொடங்கி புதன்கிழமை வரை நடைபெறுகிறது.

9 ஜனவரி 2024, 12:12 pm
பகிர்:

நாகூர் தர்காவில் நாகூர் ஆண்டவர் என அழைக்கப்படும் ஹஜ்ரத் சாஹூல் ஹமீதின் மகன் ஹஜ்ரத் செய்யது முஹம்மது யூசுப் சாஹிபின் வருடாந்திர கந்தூரி விழா திங்கள்கிழமை தொடங்கி புதன்கிழமை வரை நடைபெறுகிறது.

 கந்தூரியை முன்னிட்டு தினமும் மாலை 6.30 மணிக்கு குர்ஆன் ஹத்தமும், ஹிரஷி 9.00 மணிóக்கு மெüலூது ஷரீபும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக, 16-ம் புதன்கிழமை மாலை 4.45 மணிக்கு யூசுப் சாஹிபின் ரவுலா ஷரீபுக்கு புனித சந்தனம் பூசப்படும். அன்று இரவு 9.00 மணிக்கு தர்கா அலங்கார வாசலில் இருந்து பூகலேபு ஊர்வலம் புறப்படும்.

இதற்கான ஏற்பாட்டை நாகூர் தர்கா நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். இந்த விழாவுக்கு வருமாறு இந்திய துனை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, தமிழக ஆளுநர் ரோசையா உள்ளிட்ட பலருக்கு தர்கா நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து இந்திய துணை குடியரசுத்தலைவர் ஹமீத் அன்சாரி, தமிழக ஆளுநர் ரோசையா, மத்திய சிறுபான்மை நல அமைச்சர் திருமதி நஜ்மா ஹெப்துல்லா உள்ளிட்டோர் கந்தூரி விழாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments