FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நான் உண்மையை பேசினால் விஷால் அணியினருக்கு கஷ்டம்: சரத்குமார்

நடிகர் சங்க தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இதில் தற்போது தலைவராக இருக்கும் சரத்குமாரை எதிர்த்து விஷால் அணியினர் போட்டியிடுகின்றனர். இதற்காக இரண்டு அணிகளும் நடிகர் சங்க உறுப்பினர்களை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

9 ஜனவரி 2024, 12:12 pm
பகிர்:

நான் உண்மையை பேசினால் விஷால் அணியினருக்கு கஷ்டம் என்று சரத்குமார் கூறினார்.

நடிகர் சங்க தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இதில் தற்போது தலைவராக இருக்கும் சரத்குமாரை எதிர்த்து விஷால் அணியினர் போட்டியிடுகின்றனர். இதற்காக இரண்டு அணிகளும் நடிகர் சங்க உறுப்பினர்களை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சங்க தேர்தல் குறித்து சரத்குமார் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

Advertisement

Advertisement

விஷால் அணியினர் என் மீது தவறான பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தொடர்ந்து தவறான பிரச்சாரங்களை செய்து வந்தால் கேட்டுக் கொண்டு இருக்க மாட்டேன். தொடர்ந்து இதுபோன்ற தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டால், 15 நாட்களுக்குள் முக்கிய ரகசியத்தை வெளியிடுவேன். நான் உண்மையை பேசினால் விஷால் அணியினருக்கு கஷ்டம்.

நடிகர் சங்கத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கூறுவது மன வேதனை அளிக்கிறது. நடிகர் சங்க இடத்தில், 2013ல் அடுக்குமாடி வணிக வளாகம் கட்டப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு கட்டப்பட்டிருந்தால் பல கோடி வருவாய் கிடைத்து நலிந்த கலைஞர்கள் பலன் அடைந்திருப்பார்கள். நடிகர் சங்க தேர்தல் நல்ல முறையில் நடக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும், நடிகர் சங்க துணைத் தலைவராக சிம்பு போட்டியிடுவதாகவும், நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments