கர்நாடகத்தில் இன்று முழுஅடைப்பு போராட்டம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கலசா– பண்டூரி குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கோவா மாநில அரசை கண்டித்து கர்நாடகத்தில் இன்று (சனிக்கிழமை) முழுஅடைப்பு போராட்டம் நடக்கிறது.
கலசா– பண்டூரி குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கோவா மாநில அரசை கண்டித்து கர்நாடகத்தில் இன்று (சனிக்கிழமை) முழுஅடைப்பு போராட்டம் நடக்கிறது.
இதனால் பஸ், ஆட்டோக்கள் ஓடாது. மேலும் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பெங்களூரில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது
இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஜனதா தளம்(எஸ்) கட்சி, அரசு ஊழியர் சங்கம் உள்பட சுமார் 1,300 சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன. அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கங்களும், ஆட்டோ ஓட்டுனர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்து இருப்பதால் மாநிலத்தில் இன்று பஸ்–ஆட்டோக்கள் ஓடவில்லை.
Advertisement
Advertisement
வாடகை கார்கள், தனியார் பஸ்கள், சரக்கு ஆட்டோக்கள், சரக்கு லாரிகளின் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்களும், சினிமா திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.
அத்தியாவசிய தேவையான மருத்துவமனைகள், மருந்து கடைகள் செயல்படும். ஆம்புலன்சு வாகனங்கள் எப்போதும் போல் ஓடும். பால் வினியோகத்தில் எந்த தடையும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெறும் முழு அடைப்புக்கு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையிலும், மாநகராட்சிகளில் காவல் ஆணையர் தலைமையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாநில எல்லைப் பகுதிகளிலும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.