பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ 50 கோடி தாண்டியது: அச்சுதானந்தன்
பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட செலவு 50 கோடி ரூபாயை தாண்டிய நிலையில், இதுவரை எவ்வித வெளிநாட்டு முதலீடும் இந்தியாவிற்கு கிடைக்கவில்லை என கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் குற்றம்சாட்டினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான கே.ரமணி நூற்றாண்டு விழா பொது கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் கேரள முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தன் கலந்து கொண்டு கே.ரமணியின் உருவ படத்தை திறந்து வைத்தார்.
பின்னர் பொது கூட்டத்தில் பேசிய அவர், இந்தியாவில் பாரதிய ஜனதா அரசால் மதசார்பற்ற நிலைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி பின்பற்றி வந்த அதே தவறான பொருளாதார கொள்கையை, தற்போதைய பாரதிய ஜனதா அரசும் பின்பற்றி வருதாக அச்சுதானந்தன் புகார் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.