சிரியாவில் உடனடியாக போர்நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும்: போப் பிரான்சிஸ்
சிரியாவில் உடனடியாக போர்நிறுத்தத்தை அமல்படுத்தவேண்டும் என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிரியாவில் உடனடியாக போர்நிறுத்தத்தை அமல்படுத்தவேண்டும் என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிரியாவில் போர் ஒப்பந்தத்தை மீறி இரு தரப்பு படைகளும் தாக்குதல் நடத்த தொடங்கின.நேற்று நடந்த குண்டு வீச்சில் 25 பேர் உயிரிழந்தனர். அவர்களில் குழந்தைகளும் அடங்குவர். ஏராளமான பொதுமக்கள் பலியாவதால் மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன.
இந்நிலையில் சிரியாவில் உடனடியாக போர்நிறுத்தத்தை அமல்படுத்தவேண்டும் என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். வாடிகனின் பீட்டர் சதுக்கத்தில் நடந்த வாராந்திர பிரார்த்தனைக் கூட்டத்தில் போப் பிரான்சிஸ் பேசுகையில், சிரியாவில் மனிதாபிமானமற்ற முறையில் நடக்கும் சண்டையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது ஆறுதலை தெரிவிக்க விரும்புகிறேன்.
Advertisement
Advertisement
அத்துடன் உடனடியாக போரை நிறுத்த வேண்டும். விமான குண்டுவீச்சில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கித் தவிக்கும் குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களை வெளியேற்றும் வரையிலாவது போர்நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.