FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

நீட் தேர்வு முடிவு விரக்தியில் காணாமல் போன சென்னை மாணவி பிகாரில் மீட்பு 

நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற முடியாததால் விரக்தியில் மாயமான சென்னை மாணவி கோடீஸ்வரி பிகாரில் மீட்கப்பட்டுள்ளார். 

Updated On : 7 ஜூன் 2018, 12:30 pm IST
பகிர்:

பாட்னா: நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற முடியாததால் விரக்தியில் மாயமான சென்னை மாணவி கோடீஸ்வரி பிகாரில் மீட்கப்பட்டுள்ளார். 
 
சென்னை கீழ்ப்பாக்கம் நம்மாழ்வார் பேட்டையை சேர்ந்த ராமர் என்பவர், நீட் தேர்வு முடிவை பார்க்கச் சென்ற மகள் மாயமானதாக தலைமைச்செயலக காலணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகார் மனுவில், தமது மகள் கோட்டீஸ்வரி கடந்த முறை நீட் தேர்வெழுதியபோது கிடைத்த மதிப்பெண்ணை விட ஓராண்டு பயிற்சி பெற்று கிடைத்த மதிப்பெண் குறைவு என்றும், கடந்த 4-ஆம் தேதி நீட் தேர்வு முடிவைப் பார்க்கச் சென்ற அவர் வீடு திரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தாம் வீட்டை விட்டு வெளியே போவதாக குறுஞ்செய்தி அனுப்பியிருந்ததாகவும், போன் செய்தபோது ரயிலில் செல்வதாகக் கூறி இணைப்பைத் துண்டித்துவிட்டதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement

பெற்றோரின் புகாரின் பேரில் மாயமான மாணவி கோட்டீஸ்வரியை போலீஸார் தேடி வந்தனர். கோட்டீஸ்வரியின் செல்போன் கடைசியாக நெல்லூரில் சிக்னல் கிடைத்ததையடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற விரக்தியில் பிகார் சென்றுள்ளதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் அங்கு சென்று தேடினர். அப்போது ஒரு ஹோட்டலில் இருந்த மாணவி கோட்டீஸ்வரியை போலீஸார் மீட்டனர். பிறகு கோட்டீஸ்வரிக்கு அறிவுரைகளை வழங்கினர் போலீஸார்.

மாணவி கோட்டீஸ்வரியை போலீஸார் மீட்டுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து மகளை அழைத்துவர அவரது பெற்றோர்கள் பாட்னாவிற்கு சென்றுள்ளனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments