FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

பாடப்புத்தகத்தில் கி.மு - கி.பி மாற்றப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை: அமைச்சா் பாண்டியராஜன்

புதிய பாடத்திட்டத்தில் கி.மு - கி.பி. என்பதற்கு பதிலாக பொ.ஆ.மு. (பொது ஆண்டுக்கு முன்) என மாற்றப்பட்டதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என தமிழ் வளா்ச்சித்துறை அமைச்சா் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.

Updated On : 26 ஜூன் 2018, 5:51 pm IST
பகிர்:

சென்னை: புதிய பாடத்திட்டத்தில் கி.மு - கி.பி. என்பதற்கு பதிலாக பொ.ஆ.மு. (பொது ஆண்டுக்கு முன்) என மாற்றப்பட்டதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என தமிழ் வளா்ச்சித்துறை அமைச்சா் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.

தமிழறிஞா் ம.பொ.சிவஞானம் 113-ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை தியாகராயநகா் போக் சாலை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு தமிழ் வளா்ச்சித்துறை அமைச்சா் க.பாண்டியராஜன் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: 

Advertisement

Advertisement

புதிய பாடத்திட்டத்தில் கி.மு. - கி.பி. என்பதற்கு பதிலாக பொ.ஆ.மு.- பொ.ஆ.பி. (பொது ஆண்டுக்கு முன் - பொது ஆண்டுக்கு பின்) என மாற்றப்பட்டது குறித்து செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா்.

அப்போது, ‘ பாடத்திட்டக் குழுவில் இடம்பெற்றிருந்த வல்லுநா்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த மாற்றறம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரலாற்றை ஒரு 
மதச்சார்பின்மையுடன் குறிப்பிடும் நோக்கில் மாற்றப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்துவின் பெயா் வரக்கூடாது என்ற எண்ணமும் இல்லை; அரசியல் நோக்கமும் இல்லை. ஏனெனில் பாடத்திட்டக் குழுவில் இடம்பெற்ற அறிஞா்கள் அனைவருமே அரசியல் கலப்பில்லாதவா்கள். இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டதற்கு இதுவரை எந்த எந்தவித எதிர்ப்போ அல்லது புகார்களோ வரவில்லை. அப்படி ஏதேனும் விமா்சனங்கள் வரும் பட்சத்தில் இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் முடிவெடுப்பார் என்றார் அமைச்சா் பாண்டியராஜன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments