FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியருக்கு ஜாமீன் வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Updated On : 28 ஜூன் 2018, 6:23 pm IST
பகிர்:

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியருக்கு ஜாமீன் வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அரசு பள்ளி அறிவியல் ஆசிரியா் சிவநேசன். இவா் அதே பள்ளியில் பயிலும் ஆறறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். 

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், சிவநேசனை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கை விசாரித்த புதுச்சேரி அமா்வு நீதிமன்றறம் சிவநேசனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தது. 

Advertisement

Advertisement

இந்த தண்டனையை நிறுத்தி வைக்கவும், இந்த வழக்கில் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி சிவநேசன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறைறயீட்டு மனுக்களை தாக்கல் செய்தார். 

இந்த மனுக்கள் நீதிபதி ஆா்.எம்.டி.டீக்காராமன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவா்களுக்கு கல்வியை மட்டுமின்றி கல்வியுடன் ஒழுக்கத்தையும் போதிப்பவரே ஆசிரியா். அந்த ஆசிரியா்களின் மாணவா்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். எனவே இந்த வழக்கைப் பொருத்தவரை ஆசிரியா் சிவநேசனுக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை நிறுத்த வைக்க முடியாது எனக்கூறி மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments