FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருச்சியில் கனமழை தொடர்ந்து மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வட மாநிலங்களில் சில தினங்களுக்கு முன் புயல் வீசியதுடன், கன மழையும் பெய்தது. இதில் பலத்த உயிர்ச்சேதமும் பொருள் சேதமும் ஏற்பட்டன.

30 ஜனவரி 2024, 6:30 pm IST
rains
பகிர்:

திருச்சி: வட மாநிலங்களில் சில தினங்களுக்கு முன் புயல் வீசியதுடன், கன மழையும் பெய்தது. இதில் பலத்த உயிர்ச்சேதமும் பொருள் சேதமும் ஏற்பட்டன. இந்நிலையில், பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் புழுதிப் புயல் வீசியது. 

தலைநகர் தில்லியிலும் நேற்று மாலையில் புழுதிப் புயல் வீசியது. பின்னர் பரவலாக மழை பெய்தது.  ஹிமாசலப் பிரதேச மாநிலத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதன் காரணமாக வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன. மின்விநியோகமும் பாதிக்கப்பட்டது. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து திருச்சி இன்று ஒன்றரை மணி நேரம் உள் மாவட்டங்களின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது, மக்கள் அவதிக்குள்ளாகினர். இம்மழையால் வெப்பம் தணிந்து குளிச்சியான சூழல் நிலவியது.

Advertisement

Advertisement

வெப்பச் சலனம் காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள்மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments