FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

முக்கொம்பு மேலணை பணிகள் இன்று நிறைவடையும்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

முக்கொம்பு மேலணையில் நடைபெற்று வரும் தற்காலிக தடுப்பு அமைக்கும் பணிகள் இன்று நிறைவடையும் என தமிழக அமைச்சர்

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:


திருச்சி: முக்கொம்பு மேலணையில் நடைபெற்று வரும் தற்காலிக தடுப்பு அமைக்கும் பணிகள் இன்று நிறைவடையும் என தமிழக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். 

திருச்சியை அடுத்த முக்கொம்பு மேலணையில் 9 மதகுகள் ஆக.22ஆம் தேதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதையடுத்து இங்கு தற்காலிக தடுப்பு அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்கு ராணுவத்தை அழைக்க வேண்டும் என விவசாய சங்கப் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கையையடுத்து, பெங்களூருவில் இருந்து மேஜர் அரவிந்த் தலைமையில் 3 பேர் கொண்ட குழு செவ்வாய்கிழமை தொலைநோக்கி கருவி மற்றும் இதர ஆய்வு உபகரணங்களுடன் வந்த இக் குழுவில் இடம் பெற்றிருந்த பொறியாளர்கள் அணையின் உடைந்த மதகுகள் பகுதிகளில் ஆய்வு செய்ததோடு, பொதுப்பணித்துறை பொறியாளர்களிடம் உரிய விளக்கங்களை கேட்டறிந்தனர். 

இந்நிலையில், முக்கொம்பு மேலணையில் நடைபெற்று வரும் தடுப்புப் பணிகளை பார்வையிட்ட மாநில போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், திருச்சி முக்கொம்பில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்டுமானத்துக்கான ஆய்வு நடைபெற்று வருகிறது. முக்கொம்பு மேலணையில் உடைந்த மதகுகளை சரி செய்யும் பணிகள் இன்று நிறைவடையும் என்றார்.

Advertisement

Advertisement

மேலும், இந்த பணிகள் முடிந்ததும் கீழ்புறமுள்ள 2 மதகுகளை திறந்து புள்ளம்பாடி வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கப்படுவதோடு, காவிரியில் உள்ள இதர வாய்க்கால்களுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு கடைமடை வரையில் பாசனத்துக்கு தடையின்றி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments