முகப்பு
தற்போதைய செய்திகள்

நிலவின் சுற்றுவட்டப் பாதையை சுற்றத் தொடங்கியது சந்திரயான்-2

புவி சுற்றுவட்டப் பாதையிலிருந்து விலகி, நிலவை நோக்கி 6 நாள்களாக பயணித்து வந்த சந்திரயான்-2, நிலவின் சுற்றுவட்டப் பாதையை

Updated On : 20 ஆகஸ்ட் 2019, 10:03 am IST
பகிர்:


பெங்களூரு: புவி சுற்றுவட்டப் பாதையிலிருந்து விலகி, நிலவை நோக்கி 6 நாள்களாக பயணித்து வந்த சந்திரயான்-2, நிலவின் சுற்றுவட்டப் பாதையை இன்று செவ்வாய்க்கிழமை காலை சுமார் 9.30 மணி முதல் சுற்றத் தொடங்கி உள்ளது. இதுகுறித்த அதிகார்பூர்வ அறிவிப்பை இஸ்ரோ தலைவர் இன்று காலை 11 மணியளவில் வெளியிடுகிறார் இஸ்ரோ தலைவர் சிவன்.

விண்கலத்தின் இந்த சாதனைப் பயணம் இந்திய மக்களிடையே மட்டுமின்றி, உலக நாடுகளிடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம், 22 நாள்கள் புவி சுற்றுப்பாதையில் சுற்றிவந்தது. கடந்த புதன்கிழமை நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கியது. ஆறு நாள்களாக இந்தப் பயணத்தைத் தொடர்ந்த விண்கலம், நிலவின் சுற்றுவட்டப் பாதையை இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி முதல் சுற்றத் தொடங்கி உள்ளது.  

Advertisement

Advertisement

அதன் பின்னர், நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வரும் விண்கலம், செப்டம்பர் 1-ஆம் தேதி வரை படிப்படியாக 4 முறை சுற்றுவட்டப் பாதையின் அளவு குறைக்கப்பட்டு, இறுதியாக நிலவின் பரப்பிலிருந்து 100 கி.மீ. தொலைவிலான சுற்றுப்பாதையில் சுற்றி வரும் வகையில் விண்கலம் நிறுத்தப்படுகிறது. 

பின்னர், செப்டம்பர் 2-ஆம் தேதியன்று விண்கலத்தின் ஆர்ப்பிட்டரிலிருந்து லேண்டர் (விக்ரம்) பிரிக்கப்படும். 

அவ்வாறு பிரிக்கப்படும் லேண்டர் அமைப்பு தொடர்ந்து 4 நாள்கள் நிலவைச் சுற்றி வரும். அப்போது இரண்டு முறை அதன் சுற்றுவட்டப் பாதை அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு, இறுதியாக செப்டம்பர் 7 ஆம் தேதியன்று நிலவின் தென் துருவத்தில் மெதுவாக தரையிறக்கப்படுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments