FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மகாராஷ்டிரத்தில் 5,652 பேருக்கு கரோனா பாதிப்பு 

மகாராஷ்டிரத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 5,652 -ஆக அதிகரித்துள்ள நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 789 -ஆக உயர்ந்துள்ளது.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

மகாராஷ்டிரத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 5,652 -ஆக அதிகரித்துள்ள நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 789 -ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து 269 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,393 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிததாக 1409 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 681 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4258 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 5652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 269 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 2407 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 103 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் தில்லியில் 2248 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 48 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானில் 25 போ், ஆந்திரத்தில் 24 போ், தெலங்கானாவில் 23 போ், உத்தரப் பிரதேசத்தில் 21 போ் கரோனாவுக்கு பலியாகிவிட்டனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments