FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

கூடுதல் தளர்வுகள்: மாநில அரசுகளுக்கு சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்

கரோனா நோய்த் தொற்று குறைந்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவிக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார்.

Updated On : 17 பிப்ரவரி 2022, 8:48 am IST
மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் (கோப்புப்படம்)
பகிர்:

கரோனா நோய்த் தொற்று குறைந்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவிக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் எழுதிய கடிதத்தில்,

இந்தியாவில் ஜனவரி 21ஆம் தேதி முதல் தொடர்ந்து கரோனா நோய்த் தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த வாரம் சராசரி பாதிப்பு 50,476 ஆக பதிவாகியுள்ளன. பிப்ரவரி 15ஆம் தேதி தினசரி விகிதம் 3.63 சதவீதமாக குறைந்துள்ளது.

Advertisement

Advertisement

தற்போது நாடு முழுவதும் கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், நேர்மறை வழக்குகளை கருத்தில் கொண்டு கரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகளை அளித்தால் பயனுள்ளதாக இருக்கும்.

மக்களின் பொருளாதாரம் தடைபடாமல் இருக்க தங்கள் மாநில எல்லைகளில் உள்ள விமான நிலையங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைகளை நீக்க வேண்டும்.

தொடர்ந்து கரோனா உறுதியாகும் விகிதத்தை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும். மேலும் சோதனை, கண்காணிப்பு, சிகிச்சை, தடுப்பூசி மற்றும் விதிமுறை கடைபிடித்தல் ஆகிய ஐந்து அடுக்கு உத்திகளை பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments