கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

ராஜஸ்தான்: பாஜக தொண்டர் கொலை; இருவர் கைது 

ராஜஸ்தான்  மாநிலம் கோட்டாவில் பாரதிய ஜனதா கட்சித் தொண்டர் கொலை செய்யப்பட்ட  வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். 

DIN

ராஜஸ்தான்: ராஜஸ்தான்  மாநிலம் கோட்டாவில் பாரதிய ஜனதா கட்சித் தொண்டர் கொலை செய்யப்பட்ட  வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். 

பாஜகவின் கோட்டா மாவட்டத் தலைவர் கோபால் கிருஷ்ண சோனி, தங்கள் கட்சியைச் சேர்ந்த விக்கி ஆர்யா நேற்றிரவு படுகொலை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டினார்.

நேற்று இரவு எங்கள் கட்சியின் தொண்டர்  விக்கி ஆர்யா படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை நாங்கள் கண்டிக்கிறோம் என்றும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சோனி வலியுறுத்தினார்.

கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை தேடும் பணி நடந்து வருகிறது.

முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுபோதையில் தாயைக் கல்லால் தாக்கி கொலை செய்த மகன் கைது

அடிப்படை வசதி கோரி ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

திருடப்பட்ட எஸ்யூவி காரை கண்டுபிடிக்க உதவிய ஐபாட்

காங்கயத்தில் ரூ.93 ஆயிரத்துக்கு கொப்பரை விற்பனை

SCROLL FOR NEXT