இந்தியப் புலி, சீன டிராகனை விழுங்கி விட்டது!
பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் இந்தியா, சீனாவை விட பின் தங்கி விட்டதாக சில மாதங்களுக்கு முன்பு வரை சீனா மகிழ்ச்சியில் இருந்தது. இதைப் பற்றி குறிப்பிடும் போது; இந்தியப் புலியை, சீனா டிராகன் விழுங்கி
கடந்தாண்டுகளை விட பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் இந்தியா, சீனாவை விட பின் தங்கி விட்டதாக சில மாதங்களுக்கு முன்பு வரை சீனா மகிழ்ச்சியில் இருந்தது. இதைப் பற்றி குறிப்பிடும் போது; இந்தியப் புலியை, சீனா டிராகன் விழுங்கி விட்டது என்பதாக சீனாவின் பொருளாதார வல்லுனர்கள் கூறி மகிழ்ந்தனர்.
ஆனால் உலக வங்கி வெளியிட்டுள்ள 2016 ஆம் ஆண்டுக்கான வேகமான பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா 6.8 சதவிகித வளர்ச்சியுடன் சீனாவை முந்தி விட்டது. இதே விகிதத்தில் இந்தியப் பொருளாதாரம் நீடித்து வளர்ந்தால் 2017 ஆம் ஆண்டில் அதன் வளரும் பொருளாதார விகிதம் 7.2 % ஆகவும், 2018 ல் 7.5 % ஆகவும் தொடர்ந்து ஏற்றம் பெற்ற நிலையிலேயே நீடிக்கும் என உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இப்போது இந்தியா சீனாவைப் பார்த்து ‘சீன டிராகனை இந்தியப் புலி விழுங்கி விட்டது’ என்று சொன்னாலும் தவறில்லை. உலக வங்கி தான் சாட்சிக்கு நிற்கிறதே!
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.