FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

கரோனா நிவாரண நிதிக்கு தனது சேமிப்பு பணத்தை வழங்கிய 5 வயது சிறுமி

ஈரோட்டில் 5 வயது சிறுவர்கள் தனது தான் சேமிப்பு பணத்தை முதல்வர் கரோனா நிவாரண நிதிக்காக  வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் ஆகிறோரிடம் அளித்தார்.

Updated On : 14 மே 2021, 2:48 pm IST
கரோனா நிவாரண நிதிக்கு வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஆட்சியர் கதிரவனை நேரில் சந்தித்து தனது சேமிப்பு பணத்தை வழங்கிய நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 5 வயது சிறுமி மேஹாஸ்ரீ .
பகிர்:


ஈரோடு: ஈரோட்டில் 5 வயது சிறுவர்கள் தனது தான் சேமிப்பு பணத்தை முதல்வர் கரோனா நிவாரண நிதிக்காக  வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் ஆகிறோரிடம் அளித்தார்.

நாமக்கல் மாவட்டம் குமராபாளையம் அருகே உள்ள ஜந்துபானை புதுத்தெருவை  சேர்ந்தவர் செல்வகணபதி,மனைவி லட்சுமிநாராயணி. இவர் அப்பகுதியில் உள்ள மளிகை கடையில் கூலிவேலை செய்து வருகிறார். இவருடைய 5 வயதான மகள் எஸ்.மேஹாஸ்ரீ நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் தனது தந்தை செல்வகணபதி தரும் பணத்தை உண்டியலில் சேமித்து வந்தார். தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு பொதுமக்கள் நிதி வழங்க முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்தார். 

Advertisement

Advertisement

அந்த வகையில் மேஹாஸ்ரீ தனது தாய் லட்சுமிநாராயணி ,தந்தை செல்வகணபதியுடன் ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஆட்சியர் கதிரவனை நேரில் சந்தித்து தனது சேமிப்பு பணம் சுமார் ரூ.10 ஆயிரத்தை கரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார். பணத்தை பெற்றுக்கொண்ட வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மாவட்ட ஆட்சியர் கதிரவன் மேஹாஸ்ரீ பாராட்டினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments