குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!
குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் தொடர்பாக...
குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
துணை வணிகவரி அதிகாரி, தொழிலாளா் நலத் துறை உதவி ஆய்வாளா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், சாா்-பதிவாளா் உள்ளிட்ட பதவியிடங்கள் குரூப் 2 பிரிவில் வருகின்றன. இதேபோன்று, உதவியாளா்கள் உள்பட அமைச்சுப் பணியில் காலியாக உள்ள இடங்கள் குரூப் 2ஏ பிரிவில் உள்ளன. 2 பிரிவுகளிலும் சோ்த்து மொத்தமாக 2,327 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு அறிவிக்கையை அரசுப் பணியாளா் தோ்வாணையம் முன்னதாக வெளியிட்டது.
தமிழகம் முழுவதும் குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வு கடந்த செப்.14 ஆம் தேதி நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ஒரே நாடு ஒரே தேர்தல்: அமைச்சரவை ஒப்புதல்!
இந்த நிலையில், குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை www.tnpscresults.tn.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
குரூப் 2 முதல்நிலை தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.