✕
முகப்பு

குரூப் 4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது! 10,000 பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு

குரூப் 4 தேர்வு அறிவிப்பு நாளை (அக். 6) வெளியாவது குறித்து...

டிஎன்பிஎஸ்சி தேர்வு - பிரதிப் படம்
பகிர்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு அறிவிப்பு செவ்வாய்க்கிழமை (அக். 6) வெளியாகிறது.

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு செய்து வருகிறது.

2026 ஆம் ஆண்​டுக்​கான டிஎன்​பிஎஸ்சி வரு​டாந்​திர தேர்வு அட்டவணையின்படி, 6 தேர்​வு​களில் 5 தேர்​வு​களுக்​கான அறிவிப்புகள் வெளி​யிடப்​பட்டு, அவற்றில் குரூப் 1, 2, 2ஏ ஆகிய 3 தேர்​வு​கள் நடத்தி முடிக்​கப்​பட்​டுள்​ளன.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, தேர்வு அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி அக். 6 ஆம் தேதியில் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டு, டிச. 20 ஆம் தேதியில் தேர்வு நடைபெறும்.

கடந்த 2024 ஆம் ஆண்டில் 4,662 காலி​யிடங்​கள் இடம்​பெற்​றிருந்த நிலையில், நடப்பாண்ட்ல் 10,000 பணியிடங்கள் நிரப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தாண்டில் குரூப் 4 தேர்வுக்கு சுமார் 15 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

summary

The notification for the Group 4 exam will be released tomorrow

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.