FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வாய்ப்புக்கு நன்றி தனுஷ்: செல்வராகவன் நெகிழ்ச்சி!

தனுஷ் இயக்கும் ‘தனுஷ் 50’ படத்தில் செல்வராகவன் இணைந்துள்ளார்.

23 பிப்ரவரி 2024, 11:43 am IST
பகிர்:

தனுஷ் இயக்கும் ‘தனுஷ் 50’ படத்தில் செல்வராகவன் இணைந்துள்ளார்.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.

தொடர்ந்து, தன் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கியுள்ளார்.

Advertisement

Advertisement

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயனும், முக்கியக் கதாபாத்திரத்தில் சந்திப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பெயர் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியது. கேங்க்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ராயன் எனப் பெயரிட்டுள்ளனர்.

இதில் தனுஷின் அண்ணனும் இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் இணைந்துள்ளார்.

நடிகர் தனுஷை அறிமுகப்படுத்திய இயக்குநர் செல்வராகவனை தனுஷ் தனது படத்தில் இயக்குமளவுக்கு வளர்ந்திருக்கிறார்.

இது குறித்து தனுஷ், “உங்களை இயக்குவேன் என ஒருநாளும் நினைக்கவில்லை செல்வராகவன் சார்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு செல்வராகவன், “வாய்ப்புக்கு நன்றி இயக்குநர் சார்! இது மிகப்பெரிய படமாக மாறும். உன்னை நினைத்து பெருமையாக இருக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments