கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் . 
தற்போதைய செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: ராகுல் காந்தி இரங்கல்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

DIN

புதுதில்லி: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த வழக்குரைஞா் ஆம்ஸ்ட்ராங் (54), கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு விரைந்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் என நம்புகிறேன். மேலும் தமிழக அரசை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்துவார்கள்.

ஆம்ஸ்ட்ராங்கை பிரிந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களும் எனது ஆழ்ந்த இரங்கல் என ராகுல் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026-ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் 10 திரைப்படங்கள்! முழு விவரம்!

6 ஆண்டுக்கு பிறகு சீனாவுக்கு விமான சேவையை தொடங்கும் ஏர் இந்தியா!

வலுவான இந்திய அணி சொந்த மண்ணில் தோற்க காரணம் என்ன? புஜாரா கேள்வி!

எஸ்ஐஆர் - ஒரு கோடி பேர் வாக்குரிமை இழப்பர்: சீமான்

போலீஸ் டாக்டர்... ஜனனி அசோக் குமார்!

SCROLL FOR NEXT