முகப்பு
தற்போதைய செய்திகள்

ஓடிடியில் மகாராஜா: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளன என்பதைக் காணலாம்.

Updated On : 11 ஜூலை 2024, 5:03 pm IST
பகிர்:

திரையரங்குகளில் வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் வெளியாகி கொண்டுதான் உள்ளது. அதிலும் கமல்ஹாசனின் இந்தியன் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இருந்தாலும், ஓடிடியில் வெளியாகும் படங்களை வீட்டில் இருந்து பார்ப்பதற்க்கும் தனி ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளன என்பதைக் காணலாம்.

Advertisement

Advertisement

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற மகாராஜா திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 12 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது.

8 தோட்டாக்கள் படத்தில் நடித்த நடிகர் வெற்றி நடிப்பில் வெளியான திரைப்படம் பகலறியான். இப்படம் ஆஹா தமிழ் தளத்தில் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகிறது.

இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா, சரத் குமார், கெளதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஹிட் லிஸ்ட் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

தெலுங்கு மொழி திரைப்படங்களான 'ஜிலேபி', 'ஹரோம் ஹரா' மற்றும் 'ஆரம்பம்' உள்ளிட்ட படங்கள் ஆஹா தளத்தில் நாளை (ஜூலை 12) வெளியாகவுள்ளன.

மலையாள மொழிப்படமான மந்தாகினி திரைப்படம் மனோரமா மேக்ஸ் ஓடிடியில் ஜூலை 12-ல் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments