முகப்பு
தற்போதைய செய்திகள்

இளையராஜா இசை நிகழ்ச்சி: மெட்ரோ ரயிலில் இலவச பயணம்!

இளையராஜா இசை நிகழ்ச்சி இன்று(ஜூலை 14) நடைபெறவுள்ள நிலையில், மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 14 ஜூலை 2024, 9:14 am IST
கோப்புப்படம்
பகிர்:

இளையராஜா இசை நிகழ்ச்சி இன்று(ஜூலை 14) நடைபெறவுள்ள நிலையில், மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

"மியூசிக் மெட்ரோ மேஜிக்: இளையராஜாவின் இன்னிசை” கச்சேரிக்கு வருபவர்களுக்கு தடையில்லா மெட்ரோ பயணம் ​ சென்னை, நந்தனம் YMCA மைதானத்தில், இன்று 14.07.2024 “இளையராஜாவின் - இன்னிசை கச்சேரி” நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மார்க் மெட்ரோ உடன் இணைந்து கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்காக உடன்பாடு செய்துள்ளது.

இசை ஆர்வலர்களுக்கான சிறப்புச் சலுகையாக, கச்சேரி டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு (Paytm Insider மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும்) பிரத்யேக மெட்ரோ பாஸ்கள் (unique QR code) கூடுதல் கட்டணமின்றி வழங்கப்படும், இது அவர்கள் அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சென்று நிகழ்ச்சியை கண்டுகளித்து மெட்ரோ வழியாக அவர்கள் இடத்திற்கு திரும்புவதற்கு உதவும்.

இந்த சிறப்பு மெட்ரோ பாஸ்களை ஒரு சுற்றுப்பயணத்திற்குப் பயன்படுத்தலாம் (2 நுழைவு & 2 வெளியேறு). மெட்ரோ நிலையங்களில் உள்ள தானியங்கி வாயில்களில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் மெட்ரோ பாஸ்களை ஸ்கேன் செய்யலாம். இந்த பிரத்யேக சலுகையைப் பயன்படுத்தி, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் சென்று, தடையில்லா பயணத்தை அனுபவிக்கும்படி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.