FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

தங்கலான் முதல் பாடல் எப்போது? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Updated On : 15 ஜூலை 2024, 6:00 pm IST
பகிர்:

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம் நடிப்பில் இறுதியாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் அவருக்கு நல்ல பெயரைக் கொடுத்தது. ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் படத்தின் தூணாக இருந்தார்.

தொடர்ந்து, தங்கலான் படத்தில் இணைந்தார். கடந்த ஆண்டே படப்பிடிப்பு முடிந்த நிலையில், பொங்கல் வெளியீடாக இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

Advertisement

Advertisement

இறுதிக்கட்ட பணிகளின் தாமதத்தால் இப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தங்கலான் டிரைலர் முன்னதாக வெளியாகி, நடிகர் விக்ரமின் தோற்றமும் ஆக்சன் காட்சிகளும் பெரிதாகப் பேசப்பட்டது.

இந்த நிலையில் தங்கலான் படத்தின் முதல் பாடலான 'மினிக்கி மினிக்கி’ பாடல் வரும் ஜூலை 17 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments