மகாராஜா வெளியீட்டுத் தேதி!
நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமாக 'மகாராஜா'உருவாகி உள்ளது.
குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்கின்றனர்.
பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.
Advertisement
Advertisement
சமீபத்தில், மகாராஜா படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், தற்போது இப்படம் ஜூன் 14 ஆம் தேதி திரைக்கு வரும் என அதிராப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.