முகப்பு
தற்போதைய செய்திகள்

கருடன் பட இயக்குநருடன் இணைந்த லெஜண்ட் சரவணன்!

துரை செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கிறார்.

Updated On : 24 ஜூன் 2024, 1:57 pm IST
கருடன் பட இயக்குநருடன் இணைந்த லெஜண்ட் சரவணன்.
பகிர்:

துரை செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கிறார்.

சரவணா ஸ்டோர் விளம்பரங்களில் கலக்கிய லெஜண்ட் சரவணன் தி லெஜண்ட் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படத்தை உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கிய ஜேடி - ஜெர்ரி இப்படத்தை இயக்கியிருந்தனர்.

புதிய தோற்றத்தில் லெஜண்ட் சரவணன்.

இந்தப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து, இவர் ஜெயிலர் திரைப்படத்தில் வரும் பாடலுக்கு குழந்தைகளுடன் இணைந்து நடனமாடியிருந்தார்.

Advertisement

Advertisement

லெஜண்ட் சரவணன்.

இந்த நிலையில், கொடி, காக்கி சட்டை திரைப்படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், இது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் பகிர்ந்துள்ளார் துரை செந்தில் குமார்.

இப்படத்தில் லெஜண்ட் சரவணன் முற்றிலும் மாறுப்பட்ட வேடத்தில் நடிக்கிறார். லெஜண்ட் சரவணனின் தோற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக, சசிகுமார், சூரி நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான கருடன் திரைப்படம் நல்ல விமரிசனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.