அரசியலுக்கு வருவதை காலம் முடிவு செய்யும்: லெஜெண்ட் சரவணன்
அரசியல் வருகை குறித்து லெஜெண்ட் சரவணன்...
அரசியலுக்கு வருவது குறித்து காலம் முடிவு செய்யலாம் என லெஜெண்ட் சரவணன் கூறியுள்ளார்.
பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நடிகராகவும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்த லெஜெண்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால், அடுத்ததாக கதையம்சமுள்ள இயக்குநருடன் பணியாற்ற வேண்டும் என பல இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறார்.
இறுதியாக, எதிர்நீச்சல், கருடன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் இயக்கத்தில் லீடர் என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
Advertisement
Advertisement
தற்போது, மூன்று வேடங்களில் நடிக்கும் புதிய திரைப்படப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், கல்லூரி நிகழ்வில் பேசிய லெஜெண்ட் சரவணன், “விஜய் இப்போது முதல்வர் ஆகிவிட்டார். அவர் நடித்த திரைப்படங்களைப் போல் என் படங்கள் இருக்கும். இப்போது அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. அடுத்த தேர்தலில் போட்டியிடுவேனா என்பதை காலம்தான் முடிவு செய்யும். கடுமையாக உழைத்தால் எதிலும் வெற்றி பெறலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
Legend Saravanan has stated that time will decide on his entry into politics.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.