FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பெண் அரசியலுக்கு வருவதே சிரமம்! கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது - தமிழிசை

நாதக வேட்பாளர் கார்த்திகா கைது குறித்து தமிழிசை கருத்து...

20 அக்டோபர் 2026, 9:40 pm IST
தமிழிசை செளந்தரராஜன் - கோப்புப் படம்
பகிர்:

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட கார்த்திகா கைது செய்யப்பட்டதற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெண்கள் அரசியலுக்கு வருவதே சிரமமாக உள்ள காலகட்டத்தில், எதிர்ப்பு தெரிவித்ததற்காக கைது செய்வது ஏற்கத்தக்கதல்ல என்றும் முதல்வர் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுடன் தமிழிசை செளந்தரராஜன் பேசியதாவது:

Advertisement

Advertisement

''நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. பெண்கள் அரசியலுக்கு வருவது என்பது சிரமமான செயல். அரசியலில் எதிர்ப்பு தெரிவித்துப் பேசுவது இயல்பானது.

அதற்காக தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை, உடை மாற்றக்கூட அனுமதிக்காமல், இரவு உடையுடன் கைது செய்வது என்பது ஏற்கத்தக்கது அல்ல. வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அரசியலில் ஆர்ப்பாட்டம், மறியல் என எதையும் செய்யலாம். அரசியலப்பு சட்டத்தில் அதற்கு இடமுண்டு. அவ்வாறு செய்யும்பட்சத்தில் வழக்கு தொடர்ந்து ஜனநாயக முறைப்படி செயல்பட வேண்டும். அதை விட்டு கைது செய்வது கண்டிக்கத்தக்கது. முதல்வர் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும்'' என தமிழிசை குறிப்பிட்டார்.

summary

It's difficult for women to enter politics! Karthika's arrest is condemnable Tamilisai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments