நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!
நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு தாராபுரம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது குறித்து...
நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு தாராபுரம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பு வகித்து வரும் கார்த்திகா, அண்மையில் நடைபெற்ற தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் வேட்பாளராகக் களமிறங்கினார்.
இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, தவெக தலைவரும் முதல்வருமான விஜய்யின் பிரசாரப் பாதையில் மறியலில் ஈடுபட்டதாக, நாதக வேட்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கணவர் உள்ளிட்டோர் தமிழக காவல் துறையினரால் புதன்கிழமை (அக். 21) கைது செய்யப்பட்டனர்.
Advertisement
Advertisement
போலீசார், தவெக தொண்டரை தாக்க முயன்றதாகவும், அவதூறு விடியோ பரப்பியதாகவும் கார்த்திகா உள்பட 9 பேர் மீது 12-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கார்த்திகாவை கைது செய்ததற்கு, எதிர்க்கட்சித் தலைவர்களான மு.க. ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி, எடப்படி பழனிசாமி, அன்புமணி, தமிழிசை, நயினார் நாகேந்திரன், பிரேமலதா, டிடிவி தினகரன், அண்ணாமலை போன்றவர்கள் தங்களுடைய கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இதனிடையே, தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கார்த்திகா மனு தாக்கல் செய்தார்.
ஆதாரங்களுடன் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் வாதிக்கப்பட்ட நிலையில், அரசியல் நோக்கத்துடன் வழக்குப் பதியப்பட்டிருப்பதாக கார்த்திகா தரப்பிலும் வாதிட்டனர்.
இந்த நிலையில், பதியப்பட்ட 4 வழக்குகளிலும் ஜாமீன் மனுவை நீதிமன்றம் ஏற்றது.
Bail granted to 9 people including NTK Leader Karthika
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.