டிராகன் படத்தில் விஜே சித்து!
டிராகன் படத்தில் இணைந்த யூடியூபர்கள்.
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் படத்தில் பிரபல யூடியூபர்கள் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
‘லவ் டுடே’ பிரபலம் பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்குநர் விக்னேஷ் சிவன் லவ் இன்சுரன்ஸ் கம்பெனி (எல்ஐகே) என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இதனிடையே, ‘ஓ மை கடவுளே’ படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காயுடு லோஹர் நடிக்கிறார்.
Advertisement
Advertisement
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு டிராகன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.
இந்நிலையில், டிராகன் படத்தில் பிரபல யூடியூபர்களான விஜே சித்து, ஹர்ஷத் கான் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
யூடியூப்பில் ‘ஃபன் பன்றோம்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் விஜே சித்து. விஜே சித்து வி லாக்ஸ் யூடியூப் சேனலைத் தொடங்கி குறுகிய காலத்திலேயே அதிகம் பின்தொடர்பவர்களைப் பெற்றவர் விஜே சித்து என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.