நடிகர் டெல்லி கணேஷ் மறைவு: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இரங்கல்
தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகர்களில் ஒருவரான டெல்லி கணேஷ் மறைவுக்கு தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இரங்கல்
தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகர்களில் ஒருவரான டெல்லி கணேஷ் மறைவுக்கு தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகர்களில் ஒருவரான டெல்லி கணேஷ் மறைந்த துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இதையும் படிக்க | டெல்லி கணேஷ் மறைவு - தவெக தலைவர் விஜய் இரங்கல்
Advertisement
Advertisement
டெல்லி கணேஷ் மிகவும் எளிமையானவர். கலைத்துறையில் இவருடைய ஈடு இணையற்ற பங்களிப்பிற்காக தமிழக அரசால் வழங்கப்படும் கலைமாமணி விருது மற்றும் பல்வேறு விருதுகளைப் பெற்ற சிறப்புக்குரியவர்.
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.