பாடகர் கிருஷ்ணராஜ் மறைவு: அன்புமணி இரங்கல்
பாடகர் கிருஷ்ணராஜ் மறைவுக்கு அன்புமணி தெரிவித்துள்ள இரங்கல் குறித்து...
தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற பாடகர்களில் ஒருவரான கிருஷ்ணராஜ் மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில்,
தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற பாடகர்களில் ஒருவரான கிருஷ்ணராஜ் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
Advertisement
Advertisement
சிங்கப்பூர் அதிபராக இருந்த தமிழர் எஸ்.ஆர் நாதன் அவர்களால் பாராட்டப்பட்ட பொற்காலம் திரைப்படத்தின் ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ பாடலின் மூலம் புகழ்பெற்ற கிருஷ்ணராஜ், மக்களின் மனதை நிறைத்த நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியிருக்கிறார்.
இசையமைப்பாளர் தேவா அவர்களின் குழுவில் ஒருவராக பணியாற்றி, அவரால் அறிமுகம் செய்யப்பட்டு புகழ்பெற்ற கிருஷ்ணராஜ், தேவா மறைந்த சில நாள்களில் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது.
பாடகர் கிருஷ்ணராஜை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
Singer Krishnaraj passes away: Anbumani condoles
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.