FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பாடகர் கிருஷ்ணராஜ் மறைவு தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பு! முதல்வர் விஜய் இரங்கல்

பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்...

பாடகர் கிருஷ்ணராஜ் | முதல்வர் விஜய் - X
பகிர்:

பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் (75) உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். இவரது உடல் சென்னை, வளசரவாக்கத்திலுள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தேவா இசையமைத்த 'அதிகாலை சுபவேளை' திரைப்படத்தின் மூலம் பாடகராக அறிமுகமான கிருஷ்ணராஜ், 300-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். தேவாவின் பெரும்பாலான திரைப்படங்களில் பாடி அவரின் ஆஸ்தான பாடகர் என்ற பெயர் பெற்றவர்.

Advertisement

Advertisement

திருப்பதி ஏழுமலை வெங்கடேசா, காத்து அடிக்குது, சிரிச்சுட்டு போனாலும், தஞ்சாவூரு மண்ணு எடுத்து உள்ளிட்ட ஹிட் பாடல்களை கொடுத்தவர்.

அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் முதல்வர் விஜய் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில்,

"தமிழ்த் திரையுலகின் பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். தேவா மறைந்து சில நாள்களிலேயே அவரது ஆஸ்தான பாடகரும் மறைந்தது ரசிகர்களிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தன்னுடைய தனித்துவமான குரலாலும், உற்சாகம் ததும்பும் பாடல்களாலும் ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்த பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் மறைவு தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பாகும்.

அவரை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர் மற்றும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

summary

CM Vijay condoles the death of famous playback singer Krishnaraj

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments