முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜீவாவின் பிளாக் பட வெளியீட்டுத் தேதி!

ஜீவாவின் பிளாக் பட வெளியீட்டுத் தேதி குறித்து...

Updated On : 4 அக்டோபர் 2024, 7:25 pm IST
பிளாக் பட போஸ்டர்.
பகிர்:

நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள பிளாக் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசை ஆசையாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. தொடர்ந்து, சிவா மனசுல சக்தி, கற்றது தமிழ் போன்ற காதல் திரைப்படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கினார்.

இதனைத் தொடர்ந்து, அதிரடிப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

Advertisement

Advertisement

தற்போது, பிளாக் என்ற புதிய படத்தில் ஜீவா நடித்து முடித்துள்ளார். இப்படம் கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியிருக்கிறது.

பொடென்சியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தை கேஜி பாலசுப்ரமணி இயக்கியுள்ளார். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார்.

இந்த நிலையில், பிளாக் திரைப்படம் வரும் அக்டோபர் 11 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments