FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ரூ. 499-க்கு 15 மளிகைப் பொருள்கள்: அமுதம் அங்காடிகளில் இன்று முதல் விற்பனை!

தீபாவளி பண்டிகையையொட்டி ரூ. 499-க்கு 15 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு அமுதம் அங்காடிகளில் விற்பனை.

22 அக்டோபர் 2024, 1:51 pm
பகிர்:

தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.499-க்கு 15 மளிகைப் பொருள்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு அமுதம் அங்காடிகளில் இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் குறைந்த விலையில் மளிகைப் பொருள்களை மக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் அரசின் சார்பில் 'அமுதம் அங்காடிகள்' பல பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, 15 மளிகைப் பொருள்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு விற்பனையை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அமுதம் அங்காடியில் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி இன்று தொடக்கிவைத்தார்.

Advertisement

Advertisement

இதன்படி, ரூ. 3.8 கிலோ எடையுள்ள 15 பொருள்கள் ரூ. 499-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர், சென்னை கோபாலபுரம், அண்ணா நகர் உள்ளிட்ட 10 பகுதிகளில் உள்ள அமுதம் அங்காடிகளில் முதற்கட்டமாக இந்த விற்பனை தொடக்கிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தீபாவளியையொட்டி அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொருள்கள் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் போதுமான அளவு பொருள்கள் உள்ளன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.