செல்வராகவன் - ஜிவி பிரகாஷ்  படம்: இன்ஸ்டாகிராம்
தற்போதைய செய்திகள்

மீண்டும் இணையும் செல்வராகவன் - ஜிவி பிரகாஷ் கூட்டணி!

செல்வராகவன் - ஜிவி பிரகாஷ் கூட்டணி திரைப்படம் குறித்து...

DIN

செல்வராகவன் இயக்கும் புதிய படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார்.

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். இவர் காதல் கொண்டேன், மயக்கம் என்ன, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களை இயக்கியவர். இவரது இயக்கத்தில் கடைசியாக நானே வருவேன் படம் வெளியானது.

படம் இயக்குவது மட்டுமில்லாமல் நடித்தும் வருகிறார் செல்வராகவன். பீஸ்ட், நானே வருவேன், மார்க் ஆண்டனி, ராயன் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

செல்வராகவன் இயக்கும் புதிய படத்துக்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். முன்னதாக, இவர்கள் கூட்டணியில் மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்கள் வெளியானது.

இந்த நிலையில், செல்வராகவன் படத்துக்கு இசையமைக்கவுள்ளதாக ஜிவி பிரகாஷ் குமார் அதிகாரப்பூர்வமாக சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார். ஆனால் இது எந்தப்படம் என்ற தகவல் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT