மேட்டூர் அணை நீர்வரத்து 2,997 கன அடியாக சரிவு
மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு எதிரொலியாக, இரண்டு நாள்களில் அணையின் நீர்மட்டம் 2.50 அடி சரிந்தது.
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு எதிரொலியாக, இரண்டு நாள்களில் அணையின் நீர்மட்டம் 2.50 அடி சரிந்தது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரிந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை வினாடிக்கு 12,083 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து புதன்கிழமை காலை வினாடிக்கு 4,397 கன அடியாகவும், வியாழக்கிழமை காலை வினாடிக்கு 2,997 கன அடியாகவும் சரிந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 23,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென குறைய தொடங்கியுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை 110.05 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 107.55 அடியாக சரிந்துள்ளது. இரண்டு நாள்களில் அணையின் நீர்மட்டம் 2.50 அடி சரிந்தது.
அணையின் நீர் இருப்பு 74.97 டி.எம்.சியாக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.