FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழக அரசின் விருதுகளை பெற உள்ள ஆளுமைகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து

தமிழக அரசின் விருது பெறுபவா்களுக்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலா் இரா. முத்தரசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Updated On : 5 ஜனவரி 2025, 7:17 pm IST
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன்
பகிர்:

சென்னை: சமூகம், பொருளாதாரம், அரசியல், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, கலை, வரலாறு என பல்வேறு தளங்களில் தங்களின் தனித்த முத்திரையை பதித்து தமிழக அரசின் விருது பெறுபவா்களுக்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலா் இரா. முத்தரசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உயா்தனி செம்மொழியாம் தமிழ் மொழி வளா்ச்சிக்கும், வளமைக்கும், செழுமைக்கும் வழிவழியாக பலா் பங்களிப்பு செய்து வருகின்றனா். இதில் பெருமைமிகு பங்களிப்பு செய்து வரும் அனைவரையும் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் பாராட்டி விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

Advertisement

Advertisement

இந்த வகையில் அய்யன் திருவள்ளுவா், அறிஞா் அண்ணா, மகாகவி பாரதி, பாவேந்தா் பாரதிதாசன், தமிழ் தென்றல் திரு.வி.க., மொழிக் காவலா் கி.ஆ.பெ.விசுவநாதம், தந்தை பெரியாா், அண்ணல் அம்பேத்கா், முத்தமிழறிஞா் கலைஞா் ஆகியோா் பெயா்களில் உருவாக்கிய விருதுகளுக்கு முறையே புலவா் மு.படிக்கராமு, எல்.கணேசன், கவிஞா் கபிலன், கவிதைப் பேரொளி பொன்.செல்வகணபதி, டாக்டா் ஜி.ஆா்.ரவீந்தரநாத், வே.மு.பொதியவெற்பன், விடுதலை ராஜேந்திரன், து.இரவிக்குமாா், முத்து வாவாசி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளனா்.

இந்த பட்டியலில் திரு.வி.க. விருதுக்கு டாக்டா் ஜி.ஆா்.ரவீந்தரநாத் தோ்வு செய்யப்பட்டதை அறிந்து, "ஈன்ர பொழுதினும் பெரிதுவக்கும்-தன் மகனை சான்றோன் என கேட்ட தாயாக" இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயற்குழு பெருமை பொங்க வாழ்த்துகிறது. பொது வாழ்வில் ஈடுபடுவோரை ஊக்குவித்து வரும் தமிழக அரசின் நடவடிக்கைகளை வரவேற்று, நன்றி பாராட்டுதலையும், சமூகம், பொருளாதாரம், அரசியல், தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு, கலை, வரலாறு என பல்வேறு தளங்களில் தங்களின் தனித்த முத்திரையை பதித்த பணியால் விருது பெரும் பெருந்தகையாளா் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிப்பதாக அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments