தற்போதைய செய்திகள்

ஜன. 11 வரை சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் : அப்பாவு

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வருகிற ஜன. 11 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

DIN

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வருகிற ஜன. 11 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

இந்தாண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை (ஜன. 6) கூடியது. புத்தாண்டின் முதல் கூட்டத்தொடா் என்பதால் ஆளுநா் உரையுடன் கூட்டம் தொடங்குவது வழக்கம்.

இதற்காக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை பேரவை மண்டபத்துக்கு வருகை தந்தார். அவரை பேரவைத் தலைவா் மு.அப்பாவு வரவேற்றார்.

தொடர்ந்து சட்டப்பேரவை தொடங்கியதும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படடது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஆளுநர் ரவி திடீரென அவையில் இருந்து வெளியேறினார்.

தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டவுடன் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்பதால் ஆளுநர் வெளியேறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு,

'ஆளுநர் உரையுடன் இன்று சட்டபேரவை கூடியது, அதன் தொடர்ச்சியாக அலுவல் ஆய்வுக்குழு கூடி கூட்டத்தொடர் பற்றி முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் மறைவுக்கு பேரவையில் நாளை(செவ்வாய்க்கிழமை) இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்படும்.

அடுத்து 4 நாள்கள் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. வருகிற ஜன. 11 ஆம் தேதி வரை நடைபெறும். ஆளுநர் உரை மீதான விவாதம் ஜன. 8, 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறும்' என்று தெரிவித்துள்ளார். ஜன. 11 ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றி நிறைவு செய்வார்கள்' என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பை: டாஸ் வென்று ஆஸ்திரேலியா பந்துவீச்சு! அதிர்ச்சி அளிக்குமா ஜிம்பாப்வே?

திடீர் ரூ. 2000 அறிவிப்பு ஏன்? இந்த ஆண்டுதான் கோடைக் காலம் வருகிறதா? விஜய் சரமாரி கேள்வி!

வங்கதேச பிரதமராகும் தாரிக் ரஹ்மானுக்கு மோடி வாழ்த்து!

வங்கதேசத்தின் பிரதமராகும் ’டார்க் பிரின்ஸ்’! யார் இந்த தாரிக் ரஹ்மான்!

கின்னஸ் சாதனை... ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஜோஸ் பட்லர்! - வைரல் விடியோ

SCROLL FOR NEXT