அன்பில் மகேஸுக்கு நவ. 4 வரை போலீஸ் காவல்
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை நவ.4ஆம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்திருப்பது பற்றி...
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை நவ.4ஆம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
திமுக ஆட்சிக் காலத்தில் 1000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதி மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாககூறி, ரூ. 100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார், முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக அன்பில் மகேஸை கடந்த அக். 26 ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். இதனிடையே, அன்பில் மகேஸை 5 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்கக் கோரி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி அன்பில் மகேஸை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்குவது தொடர்பான உத்தரவு நவ. 2 ஆம் தேதி பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
Advertisement
Advertisement
இதைத்தொடர்ந்து இவ்வழக்கில் இன்று திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை நவ.4ஆம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. போலீஸ் விசாரணைக்கு முன்னதாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம் நவ.4ஆம் தேதி மாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் விசாரணை செய்யும் சப்தம் கேட்காத அளவு தூரத்தில் வழக்கறிஞர் இருக்க வேண்டும் என்றும் அன்பில் மகேஸை உடலாலும் மனதாலும் துன்புறுத்தக் கூடாது என்றும் காவல் துறைக்கு சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
Special court allows police to interrogate former DMK minister Anbil Mahesh in custody until Nov 4.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.