முகப்பு
தற்போதைய செய்திகள்

பாட்டல் ராதா டிரைலர் அறிவிப்பு!

பாட்டல் ராதா படத்தின் டிரைலர் அறிவிப்பு தொடர்பாக...

Updated On : 16 ஜனவரி, 2025 at 6:15 PM
பகிர்:
Updated On : 16 ஜனவரி, 2025 at 6:06 PM

பாட்டல் ராதா படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் பா. இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார்.

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான ரஞ்சித், தொடர்ந்து இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு, ரைட்டர், சேத்துமான், குதிரைவால், நட்சத்திரம் நகர்கிறது, பொம்மை நாயகி, ஜே பேபி, தண்டகாரண்யம் உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார்.

Advertisement

Updated On : 16 ஜனவரி, 2025 at 6:07 PM

இதையும் படிக்க: எல்ஐகே படத்தில் சீமான்!

தற்போது, பா. இரஞ்சித் தன் இணை இயக்குநரான தினகரன் சிவலிங்கம் இயக்கும் புதிய படத்தை தன் தயாரிப்பு நிறுவனம் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்துகிறார். இப்படத்திற்கு, ‘பாட்டல் ராதா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

நாயகனாக குரு சோமசுந்தரமும், இவருக்கு ஜோடியாக சஞ்சனா நடராஜனும் முக்கிய கதாபாத்திரங்களில் பாரி இளவழகன் (ஜமா), ஜான் விஜய், மாறன், ஆண்டனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மதுப்பழக்கத்தால் சீரழியும் நாயகனின் கதையாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பாட்டல் ராதா படத்தின் டிரைலர் வரும் 18 ஆம் ஆதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.