முகப்பு
தற்போதைய செய்திகள்

தவெகவும் விசிகவும் எதிரெதிர் துருவங்கள் இல்லை: ஆதவ் அர்ஜுனா

Updated On : 31 ஜனவரி 2025, 9:42 pm IST
திருமாவளவன் - ஆதவ் அர்ஜுனா சந்திப்பு
பகிர்:

தவெகவும் விசிகவும் எதிரெதிர் துருவங்கள் இல்லை என்று தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று இணைந்தார். தவெகாவில் இணைந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை அவரது கட்சி அலுவலகத்தில் ஆதவ் அர்ஜுனா இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

Advertisement

Advertisement

இதையும் படிக்க: இட ஒதுக்கீட்டுக்கான ஒரே தீர்வு, சாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமே: வேல்முருகன்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய திருமாவளவன், எங்கள் சந்திப்பில் அரசியல் கணக்கு இல்லை எனவும் பெரியாரின் தேவை இன்றியமையாத ஒன்றாக உள்ளதாக ஆதவ் அர்ஜுனா தன்னிடம் பகிர்ந்து ஆசி பெற்றதாகவும் தெரிவித்தார்.

மேலும் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களுடன் பேசுகையில், “அண்ணனை சந்தித்து ஆசி பெற வந்திருக்கிறேன். தவெகவும் விசிகவும் எதிரெதிர் துருவங்கள் இல்லை, கொள்கை ரீதியானவற்றை திருமாவளவனிடம் கற்றேன், அவர்தான் எனக்கு ஆசான், எனக்கும் திருமாவளவனுக்கும் கொள்கை ரீதியாக மாறுபாடு இல்லை ” என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.