முகப்பு
தற்போதைய செய்திகள்

இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை

இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

Updated On : 25 மே 2025, 10:31 pm IST
சேலம் நெடுஞ்சாலை நகரில் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வீடு மற்றும் அந்தத் தெரு பகுதியில் சூரமங்கலம் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
பகிர்:

சேலம்: சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

சேலம் நெடுஞ்சாலை நகரில் முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வீடு உள்ளது. எப்போதும் பாதுகாப்பு நிறைந்த இந்த பகுதியில் போலீசாரும் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து சேலம் போலீஸ் கட்டுப்பாட்டுக்கு தகவல் வந்தது.

அடையாளம் தெரியாத வாகனம் மோதி காவல் உதவி ஆய்வாளர் பலி

தகவலை அடுத்து அடிப்படையில் சூரமங்கலம் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு மோப்ப நாயுடன் வந்து அவர் வீடு மற்றும் அந்தத் தெரு பகுதிகளிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

Advertisement

Advertisement

மேலும், பல்வேறு இடங்களிலும் மெட்டல் டிடெக்டர் கருவி, வெடிகுண்டு செயலிழப்பு, தடுப்புக் கருவிகள் துணையுடன் நிபுணா்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

ஒரு மணி நேரம் நீடித்த இந்தச் சோதனையில் வெடிபொருள்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதையடுத்து வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவல் புரளி என தெரியவந்தது. தொடர்ந்து இபிஎஸ் வீட்டு முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments