முகப்பு
தற்போதைய செய்திகள்

மதுரையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்! திமுகவினர் உற்சாக வரவேற்பு!

முதல்வர் மு.க. ஸ்டாலின் மதுரைக்கு வந்துள்ளது பற்றி...

Updated On : 31 மே 2025, 3:40 pm IST
பகிர்:

திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க மதுரை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திமுக பொதுக் குழு கூட்டம் நாளை( ஜூன் 1) மதுரையில் நடைபெறுகிறது. இதற்காக உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் அண்ணா அறிவாலயம் முகப்பு போன்று வடிவமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்து திமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலமாக இன்று பிற்பகல் மதுரை வந்தடைந்தார். அவருக்கு மதுரை மாவட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Advertisement

Advertisement

தனியார் ஹோட்டலில் ஓய்வு எடுக்கும் முதல்வர், மாலையில் அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியில் உள்ள மருதுபாண்டியர் சிலையில் இருந்து தொடங்கி சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை பேரணி நடத்துகிறார்.

முன்னதாக, '2026 தேர்தல் களத்தில் பெருவெற்றியைப் பெற்றிடப் பொதுக்குழு கூடிடும் மாமதுரை' என்று திமுக பொதுக்குழு கூட்டம் ஏற்பாடுகள் குறித்த ஒரு விடியோவை முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அடுத்தாண்டு தேர்தலுக்கு முன்பாக முதல்வரின் இந்த மதுரை பயணம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments