மேட்டூர் அணை நீர்மட்டம் 4-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது!
மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து நான்காவது நாளாக 120 அடியாக நீடிக்கிறது தொடர்பாக...
மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து நான்காவது நாளாக வியாழக்கிழமை(அக்.23) 120 அடியாக நீடிக்கிறது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 35,500 கனஅடியாக நீடிக்கிறது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22,300 கனஅடி வீதமும், உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 12,700 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 93.47 டிஎம்சி
மேட்டூரில் 67.4 மி.மீ. மழை பெய்துள்ளது.
Mettur Dam water level remains at 120 feet for the 4th day...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.