முகப்பு
தற்போதைய செய்திகள்

நாளை வெள்ளியங்கிரி மலை, கோவை குற்றாலம் செல்ல வனத் துறை தடை!

தேர்தலையொட்டி நாளை வெள்ளியங்கிரி மலை, கோவை குற்றாலம் செல்ல வனத் துறை தடை விதித்திருப்பது குறித்து...

Updated On : 22 ஏப்ரல் 2026, 9:21 am IST
நாளை வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல வனத் துறை தடை! - கோப்புப்படம்
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலை, கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கும், பக்தா்களுக்கும் வியாழக்கிழமை(ஏப்.23) வனத் துறை தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வியாழக்கிழமை (ஏப்.23) நடக்கிறது. தோ்தல் பாதுகாப்புப் பணியில் 1.47 லட்சம் போலீஸாா் ஈடுபடுகின்றனா். 5.73 கோடி வாக்காளா்கள் வாக்களிப்பதற்காக மாநிலம் முழுவதும் 75 ஆயிரத்து 32 வாக்குச்சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளன. தேர்தலில் 100% வாக்குப் பதிவை ஏற்படுத்த பல்வேறு விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் 3,563 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் நேரில் சென்று வாக்களிக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. அதுபோன்று வாக்குப் பதிவின் போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினரும், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நாளை வாக்குப் பதிவை முன்னிட்டு கோவை குற்றாலம் அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதுபோன்று பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் அருகே உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் செல்வதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக வனத்துறை வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் வகையில் வியாழக்கிழமை (ஏப்.23) ஒரு நாள் மட்டும் கோவை குற்றாலம் அருவி மூடப்படுகிறது. இங்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று வெள்ளியங்கிரி மலைக்கு புதன்கிழமை மாலை 6 மணி முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை அதிகாலை(ஏப்.24) வழக்கம் போல் வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் செல்லலாம், இந்த உத்தரவை மக்கள் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட நேரத்தில் கோவை குற்றாலம் அருவி, வெள்ளியங்கிரி மலைக்கு மக்கள் யாரும் செல்ல முயற்சி செய்ய வேண்டாம்.

இந்த தடை மீறி குற்றாலம் அருவி, வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் செல்வதை தடுக்க வனத் துறையின் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் யானை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனா்.

வனத் துறையின் தடையை மீறி தடைசெய்யப்பட்ட வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைபவா்கள் மீது இந்திய வனப் பாதுகாப்புச் சட்டப்படி தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

The Forest Department's ban on visiting Velliangiri Hills and Kovai Kuttralam tomorrow, in light of the elections...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments