முகப்பு
தற்போதைய செய்திகள்

பேரணாம்பட்டு பகுதியில் கனமழை: மின்னல் பாய்ந்து சிறுவன் பலி

பேரணாம்பட்டு அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் மின்னல் பாய்ந்து சிறுவன் பலியானது குறித்து...

மின்னல் பாய்ந்து பலியான சிறுவன் வைரமுத்து(14) - டிஎன்எஸ்
பகிர்:

பேரணாம்பட்டு அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் மின்னல் பாய்ந்து சிறுவன் பலியான நிகழ்வு அந்த பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் கடும் வெப்பம் வாட்டி வந்த நிலையில், வியாழக்கிழமை மாலை பேரணாம்பட்டு நகர சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென ஆலங்கட்டியுடன் கூடிய கனமழை பெய்தது.

இந்த நிலையில், பேரணாம்பட்டு அடுத்த சொக்கரிசிகுப்பத்தை சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் வைரமுத்து(14) சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இடியுடன் கூடிய கனமழை பெய்து. அந்த சமயம் மின்னல் பாய்ந்ததில், வைரமுத்து சம்பவ இடத்திலே பலியானார்.

Advertisement

Advertisement

உடனடியாக அங்கிருந்த உறவினர்கள் அவரை மீட்டு மேல்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் சிறுவன் மின்னல் பாய்ந்ததில் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த மேல்பட்டி போலீசார் சிறுவனின் உடலை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டின் அருகே நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த சிறுவன் மின்னல் பாய்ந்து பலியான சம்பவம் உறவினர்கள் மற்றும் கிராமத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

summary

Heavy rain in Peranampattu area: Boy dies after being struck by lightning

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments