FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மஹாளய அமாவாசை: மேட்டூர் காவிரியில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

மஹாளய அமாவாசையை ஒட்டி மேட்டூர் காவிரியில் சனிக்கிழமை புனித நீராடிய மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது குறித்து...

10 அக்டோபர் 2026, 9:31 am IST
மேட்டூர் காவிரியில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் மக்கள் - டிஎன்எஸ்
பகிர்:

சேலம் மாவட்டம் மேட்டூரில் புரட்டாசிமாத மஹாளய அமாவாசையை ஒட்டி மேட்டூர் காவிரியில் சனிக்கிழமை புனித நீராடிய பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மஹாளய அமாவாசையாக கருதப்படுகிறது. இந்நாளில் தங்களுடன் வாழ்ந்து மறைந்த மூத்தோரின் ஆன்மா அமைதி பெற வேண்டி எள், தண்ணீர் வைத்து தர்ப்பணம் அளித்தல், பிண்டம் வைத்து பரிகார வழிபாடுகள் செய்வது வழக்கம். இதனால் தங்களின் பாவங்கள் நீங்கி முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பது ஐதிகம்.

ஆண்டுதோறும் மஹாளய அமாவாசையில் மேட்டூர் காவிரியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு மூத்தோர் வழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.

Advertisement

Advertisement

மஹாலய அமாவாசையையொட்டி, சனிக்கிழமை காலை மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படும் மேட்டூர் பேருந்து நிலையம்

அந்தவகையில் சேலம், தருமபுரி, பவானி, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சனிக்கிழமை அதிகாலை முதல் குடும்பம் குடும்பமாக மேட்டூர் காவிரி கரையில் குவிந்தனர்.

காவிரியில் புனித நீராடி படித்துறைகளில் அமர்ந்து புரோகிதர்கள் மூலம் வேத மந்திரங்களை உச்சரித்து தங்கள் முன்னோர்களுக்கு தர்பனம் கொடுத்தனர். இதனால் மேட்டூர் காவிரி கரையில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

காவிரியில் புனித நீராடி படித்துறைகளில் அமர்ந்து புரோகிதர்கள் மூலம் வேத மந்திரங்களை உச்சரித்து தங்கள் முன்னோர்களுக்கு தர்பனம் கொடுக்கும் மக்கள்

மேட்டூர் காவேரி பாலம், புதுப்பாலம், அணைக்கட்டு முனியப்பன் கோயில் பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

மஹாலய அமாவாசையையொட்டி, கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலைக்கு அரசு பேருந்துகள் விடப்பட்டன. ஆனால் சனிக்கிழமை காலை மக்கள் கூட்டமின்றி மேட்டூர் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

Mahalaya Amavasya: Holy dip in the Cauvery at Mettur and Tharpanam for ancestors

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments